
Album: Kodugal Illatha Kolangal
Artists:
Music by:
Lyricist: H. R. Vijayan
Release Date: 02-05-2022 (11:14 PM)
Album: Kodugal Illatha Kolangal
Artists:
Music by:
Lyricist: H. R. Vijayan
Release Date: 02-05-2022 (11:14 PM)
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா
பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்
ஆண் : பூ மலரும் வேளையிலே
கண் மலர்ந்தாள் பெண் மயிலாள்
வாய் மலர்ந்தால் வேங்குழல்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்….
பெண் : காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்
காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்
பெண் : உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன்
ஆண் : பூ மலரும் வேளையிலே….
ஆண் : சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
மென் மலரே நீ இப்போ
என் மலராக நீ வந்தாய்…
ஆண் : பூ மலரும் வேளையிலே….
பெண் : மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்
மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்
பெண் : நெய் மணந்தால் சுவை சேர்க்கும்
பெண் மணந்தால் துணை சேர்க்கும்
இந்த பெண் மணந்தால் துணை சேர்க்கும்..
ஆண் : பூ மலரும் வேளையிலே
பெண் : லால் லல லா
ஆண் : கண் மலர்ந்தாள்
பெண் : லால் லல லா
ஆண் : பெண் மயிலாள்
பெண் : லால் லல லா
ஆண் : வாய் மலர்ந்தால்
பெண் : லால் லல லா
ஆண் : வேங்குழல்தான்
பெண் : லால் லல லா
ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்
பெண் : லால் லல லா
ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்….
பெண் : லால் லல லா