
Album: Deviyin Thiruvilayadal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 26-01-2022 (02:00 PM)
Album: Deviyin Thiruvilayadal
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 26-01-2022 (02:00 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : M. S. Vishwanathan
Male : Aa….aa….aa…..aa….aah….aah….
Aa….aa….aah….aa….aah….aah….
Male : Mazhai Koondhal Mudhal Malarpaatham Varai
Dheiva Kaatchi Therigindrathu
Mazhai Koondhal Mudhal Malarpaatham Varai
Dheiva Kaatchi Therigindrathu
Male : Ezhil Kolangalum Indhira Jaalangalum
Adhil Aatchi Puringindrathu Arulaatchi Purigindrathu
Ezhil Kolangalum Indhira Jaalangalum
Adhil Aatchi Puringindrathu Arulaatchi Purigindrathu
Male : Mazhai Koondhal Mudhal Malarpaatham Varai
Dheiva Kaatchi Therigindrathu
Male : Ilampirai Nudhal Meedhu
Ezhuthiya Vil Kandaen
Imaigalin Nizhaloram
Erikazhal Vizhi Kandaen
Male : Kulam Valar Kamalam Pol….kamalam Pol….
Kulam Valar Kamalam Pol
Kuviyithal Madal Kandaen Nudhal Kandaen
Vizhi Kandaen Idhazh Kandaen
Kaniyithazh Kandaen
Male : Kulam Valar Kamalam Pol
Kuviyithal Madal Kandaen
Kuviyithazh Nagaiyoram
Korkkaiyin Paral Kandaen
Male : Mazhai Kondhal Mudhal Malarpaatham Varai
Dheiva Kaatchi Therigindrathu
Male : Valampuri Sangaaga Vanjiyin Kazhuththaada
Aa….aa….aa…aa….aah….aahaa…..
Valampuri Sangaaga Vanjiyin Kazhuththaada
Oru Kani Kuraivaaga Mukkani Ezhunthaada
Oru Kani Kuraivaaga Mukkani Ezhunthaada
Male : Megalai Nagaiyaada Melliya Idaiyaada
Vaazhaiyin Madal Kettu Vaangiya Thodaiyaada
Megalai Nagaiyaada Melliya Idaiyaada
Vaazhaiyin Madal Kettu Vaangiya Thodaiyaada
Male : Meniyil Edhai Solla
Naan Adhil Edhai Thalla
Naan Padaiththa Nyaanamellaam
Vaai Pudhaiththu Nindrathenna
Aa….aa….aa…aa….aah….aahaa…..
Aah….aahaa….
Male : Poovalanthu Ponnalanthu Meviya
Devi Unthan Paadha Thaamarai
Dhevarenna Moovarenna
Yaavarum Thedi Nirkkum Vedha Thamarai
Male : Kulungidum Salangaigal Om Ena Oliththida
Komaaala Vadhanaththil Kungumam Palichchida
Iyal Isai Naadaga Kooththukkal Nadiththida
Yaezhu Kadal Enndhisai Idipada Podipada
Male : Thagida Thagida Thagida Thomena
Jadhiyosaiyil Tharani Adhirnthida
Magasakasa Nisanipamakama
Swararaaga Geedham Isaiththida
Male : Tuttutuvena Pambai Thaalam
Dumdumvena Jandai Melam
Amma Un Aranginil Aattrida
Pumpumvena Bhoombin Saththam
Damdamdamena Kottum Paraigal
Kondaadum Abinaya Naayagi
Male : Thaththum Kalai Viththai Ilam
Thaththai Ival Thanjam Ena
Pazhagu Nadanam Azhagu Nalinam
Puvanam Ariyaavae
Alaimagalum Adipaniya
Kalaimagalum Kavi Pozhiya
Malaimagalin Thirunadanam Vaazhga….
Male : Vaanamodu Bhoomiyaada Ulavidum
Jeevaraasi Yaavum Aada Nadamidum
Azhagellam Vizhiyellaam Parugida
Arulae Nerungi Vaa…..
Male : Mazhai Kondhal Mudhal Malarpaatham Varai
Dheiva Kaatchi Therigindrathu….aa…..aa…aa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆஹ்….ஆஹ்……
ஆ…..ஆ…..ஆஹ்……ஆ…..ஆஹ்….ஆஹ்……
ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது
மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது
ஆண் : எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும்
அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது
எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும்
அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது
ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது……
ஆண் : இளம்பிறை நுதல் மீது
எழுதிய வில் கண்டேன்
இமைகளின் நிழலோரம்
எரிகழல் விழிக் கண்டேன்
ஆண் : குளம் வளர் கமலம் போல்…..கமலம் போல்….
குளம் வளர் கமலம் போல்
குவியிதழ் மடல் கண்டேன் நுதல் கண்டேன்
விழிக் கண்டேன் இதழ் கண்டேன்
கனியிதழ் கண்டேன்
ஆண் : குளம் வளர் கமலம் போல்
குவியிதழ் மடல் கண்டேன்
குவியிதழ் நகையோரம்
கொற்கையின் பரல் கண்டேன்
ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது..
ஆண் : வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்ஆ…..
வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட….
ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட
ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட
ஆண் : மேகலை நகையாட மெல்லிய இடையாட
வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட
மேகலை நகையாட மெல்லிய இடையாட
வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட
ஆண் : மேனியில் எதை சொல்ல
நான் அதில் எதை தள்ள
நான் படைத்த ஞானமெல்லாம்
வாய் புதைத்து நின்றதென்ன
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்ஆ…..
ஆஹ்…..ஆஹ்ஆ…….
ஆண் : பூவளந்து பொன்னளந்து மேவிய
தேவி உந்தன் பாத தாமரை
தேவரென்ன மூவரென்ன
யாவரும் தேடி நிற்கும் வேத தாமரை
ஆண் : குலுங்கிடும் சலங்கைகள் ஓம் என ஒலித்திட
கோமள வதனத்தில் குங்குமம் பளிச்சிட
இயல் இசை நாடக கூத்துகள் நடித்திட
ஏழுகடல் எண்திசை இடிபட பொடிபட
ஆண் : தகிட தகிட தகிட தகிடதோமென
ஜதியோசையில் தரணி அதிர்ந்திட
மகஸகஸ நிஸநிபமகம
ஸ்வரராக கீதம் இசைத்திட….
ஆண் : டுட்டுடுவென பம்பை தாளம்
டும்டும்வென ஜண்டை மேளம்
அம்மா உன் அரங்கினில் ஆற்றிட
பும்பும்வென பூம்மின் சத்தம்
டம்டம்டம்மென கொட்டும் பறைகள்
கொண்டாடும் அபிநய நாயகி
ஆண் : தத்தும் கலை வித்தை இளம்
தத்தை இவள் தஞ்சம் என
பழகு நடனம் அழகு நளினம்
புவனம் அறியவே…..
அலைமகளும் அடிபணிய
கலைமகளும் கவி பொழிய
மலைமகளின் திருநடனம் வாழ்க……
ஆண் : வானமொடு பூமியாட உலவிடும்
ஜீவராசி யாவும் ஆட நடமிடும்
அழகெல்லாம் விழியெல்லாம் பருகிட
அருளே நெருங்கி வா……
ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது….ஆ….ஆ….ஆ…..